< Back
பிற விளையாட்டு
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேற்றம்

Image Courtesy : AFP 

பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
14 July 2022 7:30 PM IST

சாய்னா நேவால் சீனாவின் முன்னணி வீராங்கனை பிங் ஜியாவை வீழ்த்தினார்.

சிங்கப்பூர் ,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த நிலையில் அவரை தொடர்ந்து மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடந்த காலிறுதிக்கு முந்தய சுற்றில் சாய்னா நேவால் சீனாவின் முன்னணி வீராங்கனை பிங் ஜியாவை எதிர் கொண்டார். இந்த போட்டியில் சாய்னா 21-19, 11-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

மேலும் செய்திகள்