< Back
பிற விளையாட்டு
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்
பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
5 Jun 2023 10:52 AM IST

பிரெஞ்சு ஓபன் டென்னிசின் நான்காவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வெற்றி பெற்றுள்ளார்.

பாரீஸ்,

நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஸ்லோனி ஸ்டீபன்சுடன் மோதினார்.

இதில் சபலென்கா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை சந்திக்கிறார்.

மேலும் செய்திகள்