< Back
கிரிக்கெட்
இரானி கோப்பையை வென்றது ரெஸ்ட் ஆப் இந்தியா
கிரிக்கெட்

இரானி கோப்பையை வென்றது ரெஸ்ட் ஆப் இந்தியா

தினத்தந்தி
|
4 Oct 2023 4:32 AM IST

ரெஸ்ட் ஆப் இந்தியா 175 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

ராஜ்கோட்,

சவுராஷ்டிரா - ரெஸ்ட் ஆப் இந்தியா இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 308 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

94 ரன் முன்னிலையுடன் 3-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 160 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 255 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சவுராஷ்டிரா 34.3 ஓவர்களில் 79 ரன்னில் சுருண்டது. புஜாரா 7 ரன்னில் ஏமாற்றினார். ரெஸ்ட் ஆப் இந்தியா 175 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

மேலும் செய்திகள்