< Back
பிற விளையாட்டு
பேட்மிண்டன் தரவரிசையில் ரஜாவத் முன்னேற்றம்

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

பேட்மிண்டன் தரவரிசையில் ரஜாவத் முன்னேற்றம்

தினத்தந்தி
|
12 April 2023 2:26 AM IST

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 2 இடம் சறுக்கி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.

புதுடெல்லி,

பேட்மிண்டன் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத் 20 இடங்கள் ஏற்றம் கண்டு தனது சிறந்த தரநிலையாக 38-வது இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் (பிரான்ஸ்) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த 21 வயதான ரஜாவத் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 8-வது இடத்தில் தொடருகிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 2 இடம் சறுக்கி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் செய்திகள்