< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
இந்திய ஆண்கள் செஸ் அணி பயிற்சி முகாம்: பிரக்ஞானந்தா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்பு
|27 Aug 2023 12:19 AM IST
இந்திய ஆண்கள் செஸ் அணி பயிற்சி முகாம் கொல்கத்தாவில் வருகிற 30-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
கொல்கத்தா,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 634 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய பெண்கள் செஸ் அணி பயிற்சி முகாம் கடந்த 25-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய ஆண்கள் செஸ் அணி பயிற்சி முகாம் கொல்கத்தாவில் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, கிராண்ட்மாஸ்டர்கள் விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகாசி, குகேஷ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.