கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் : மேக்னஸ் கார்ல்சனை வென்ற இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி...!
|கத்தார் மாஸ்டர்ஸ் செஸ்ஸில் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி வென்றுள்ளார்.
கத்தார்,
கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் 7 வது சுற்று போட்டியில் உலக சாம்பியன் ஆன மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி எதிர் கொண்டார். இதில் அவர் கருப்பு காய்களுடன் ஆடினார். மிகவும் அற்புதமாக ஆடிய கார்த்திகேயன் கார்ல்சனின் சிறிய தவறை கச்சிதமாக பிடித்து கொண்டார். இதனை சரியாக பயன்படுத்தி இறுதியில் அவர் அபார வெற்றி பெற்றார்.மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கார்த்திகேயன் முரளி அபாரமாக ஆடி வெற்றி பெற்றார். இன்னும் 2 சுற்றுகள் மீதம் உள்ளன . தற்போது கார்த்திகேயன் 5.5 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார்.
இதன் மூலம் மேக்னஸ் கார்ல்சனை வென்ற 3 வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். சமீபத்தில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீர பிரக்யானந்தாவை வென்று மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.