< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்
|21 Oct 2023 12:32 AM IST
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
ஒடென்ஸ்,
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசையில் 12-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங்கை எதிர்கொண்டார்.
இதில் சிந்து 21-19, 21-12 என்ற நேர்செட்டில் சுபனிதாவை விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 47 நிமிடமே தேவைப்பட்டது. சிந்து அரைஇறுதியில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்திக்கிறார். அவருக்கு எதிராக 15 முறை மோதியுள்ள சிந்து அதில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.