< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி

Image tweeted by @ProKabaddi 

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி

தினத்தந்தி
|
2 Nov 2022 3:24 PM GMT

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா -தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா -தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யு மும்பா அணி 40-37 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. யு மும்பா அணி தரப்பில் சிறப்பாக ரெய்டு சென்ற அஷிஷ் தனது அட்டகாசமான ரெய்டு மூலம் 12 புள்ளிகள் பெற்று கொடுத்தார். இதன் மூலம் இந்த தொடரில் யு மும்பா 6 வெற்றிகளுடன் (31 புள்ளிகள்) புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேலும் செய்திகள்