புரோ கபடி லீக் போட்டி டிசம்பர் 2-ந் தேதி தொடக்கம்
|10-வது புரோ கபடி லீக் போட்டி டிசம்பர் 2-ந் தேதி தொடங்குகிறது.
மும்பை,
12 அணிகள் இடையிலான 10-வது புரோ கபடி லீக் போட்டி ஆமதாபாத்தில் டிசம்பர் 2-ந் தேதி தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்று அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. பிளே-ஆப் சுற்று அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று போட்டி அமைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
லீக் சுற்று ஆட்டங்கள் ஆமதாபாத்தை (டிச.2-7), தொடர்ந்து பெங்களூரு (டிச.8-13), புனே (டிச.15-20), சென்னை (டிச.22-27), நொய்டா (டிச.29-ஜன.3), மும்பை (ஜன.5-10), ஜெய்ப்பூர் (ஜன.12-17), ஐதராபாத் (ஜன.19-24), பாட்னா (ஜன.26-31), டெல்லி (பிப்.2-7), கொல்கத்தா (பிப்.9-14), பஞ்ச்குலா (பிப்.16-21) ஆகிய நகரங்களில் நடக்கிறது. கபடி ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.