< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்..!

Image Courtesy: @ProKabaddi 

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்..!

தினத்தந்தி
|
6 Dec 2023 5:17 AM GMT

10-வது புரோ கபடி லீக் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

ஆமதாபாத்,

10-வது புரோ கபடி லீக் திருவிழா ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.

மேலும் செய்திகள்