< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

image courtesy: ProKabaddi twitter

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி

தினத்தந்தி
|
27 Nov 2022 3:18 PM GMT

இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 42-39 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்று வரும் 2-வது போட்டியில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

மேலும் செய்திகள்