< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: குஜராத் அணியை வீழ்த்தி யு.பி.யோத்தா வெற்றி

image courtesy: ProKabaddi twitter

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: குஜராத் அணியை வீழ்த்தி யு.பி.யோத்தா வெற்றி

தினத்தந்தி
|
21 Nov 2022 4:31 PM GMT

இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் யு.பி.யோத்தா-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் யு.பி.யோத்தா-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யு.பி.யோத்தா அணி 35-31 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்