< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் இடையிலான போட்டி - இன்று நடக்கிறது
|27 Nov 2022 5:01 AM IST
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஐதராபாத்,
9-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் யு மும்பா அணி 49-41 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் புனேரி பால்டன் 38-25 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சையும், உ.பி.யோத்தாஸ் 35-33 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சையும் வீழ்த்தின.
இதனை தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது. இதே போல் மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.