< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்:  தமிழ் தலைவாஸ்- யு மும்பா அணிகள் இன்று மோதல்
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- யு மும்பா அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
14 Oct 2022 4:38 AM IST

புரோ கபடி லீக்கில் இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது.

பெங்களூரு,

9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது.

இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்- யு மும்பா அணிகள் இரவு 7.30 மணியளவில் மோதுகின்றன. மேலும், அரியானா ஸ்டீலர்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன. இதனை தொடர்ந்து குஜராத் ஜெயன்ட்ஸ்-புனேரி பால்டன் அணிகள் இரவு 9.30 மணிக்கு மோதுகின்றன.

மேலும் செய்திகள்