< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்:  முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

mage Courtesy : Pro Kabaddi 

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

தினத்தந்தி
|
7 Dec 2022 4:32 PM GMT

இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - யுபி யோத்தா அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - யுபி யோத்தா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் . 43 - 28 என்ற கணக்கில் புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் அணி தகுதி பெற்றது.

மேலும் செய்திகள்