< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் ஆட்டம் டை

Image Tweeted By ProKabaddi

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் ஆட்டம் 'டை'

தினத்தந்தி
|
16 Nov 2022 3:26 PM GMT

தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 33-33 என்ற புள்ளி கணக்கில் 'டை' ஆனது.

தமிழ் தலைவாஸ் அணி சார்பில் சிறப்பாக விளையாடிய நரேந்தர் 3 போனஸ் புள்ளிகள் உட்பட 16 புள்ளிகளை குவித்து அசத்தினார். இந்த 'டை'யின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேலும் செய்திகள்