< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: வெளியேற்றுதல் சுற்றில் உ.பி. அணியை சந்திக்கிறது தமிழ் தலைவாஸ்
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: வெளியேற்றுதல் சுற்றில் உ.பி. அணியை சந்திக்கிறது தமிழ் தலைவாஸ்

தினத்தந்தி
|
12 Dec 2022 8:13 PM GMT

முதல் முறையாக பிளே-ஆப் சுற்றை எட்டியுள்ள தமிழ் தலைவாஸ் அணி சாதிக்குமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

மும்பை,

9-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பால்டன் (80 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று நேரடியாக அரைஇறுதியில் விளையாடுகின்றன.

இதே போல் 3-வது இடத்தை பெங்களூரு புல்சும் (74 புள்ளி), 4-வது இடத்தை உ.பி. யோத்தாசும் (71 புள்ளி), 5-வது இடத்தை தமிழ் தலைவாசும் (66 புள்ளி), 6-வது இடத்தை நடப்பு சாம்பியன் தபாங் டெல்லியும் (63 புள்ளி) பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு வந்துள்ளன.

பிளே-ஆப் சுற்று மும்பையில் இன்று தொடங்கிறது. இதன்படி இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி (இரவு 7.30 மணி), தமிழ் தலைவாஸ்- உ.பி. யோத்தாஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி காணும் அணிகள் அரைஇறுதியை எட்டும். தோற்கும் அணிகள் வெளியேறும். முதல் முறையாக பிளே-ஆப் சுற்றை எட்டியுள்ள தமிழ் தலைவாஸ் அணி சாதிக்குமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். இவ்விரு அணிகளும் இந்த சீசனில் மோதிய இரு லீக்கில் தலா ஒன்றில் வெற்றி பெற்றன.

மேலும் செய்திகள்