< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: அரியானா அணியிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ் அணி
|11 Oct 2022 9:07 PM IST
அரியானா அணி 27-22 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பெங்களூரு,
புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 12-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. தொடக்க போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத்துடன் 31-31 என்ற கணக்கில் 'டை' செய்தது.
இதனால் இன்றைய போட்டியில் அரியானாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் களமிறங்கியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அரியானா அணி 27-22 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி இருந்த அரியானா இன்று 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.