< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் ஆட்டம் டிரா

Image tweeted by @ProKabaddi 

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் ஆட்டம் டிரா

தினத்தந்தி
|
2 Nov 2022 9:55 PM IST

இன்றைய நாளின் 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு மும்பா அணி 40-37 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து நடைபெற்ற இன்றைய நாளின் 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை வகிக்க 2-வது பாதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இறுதியில் 41-41 என்ற புள்ளி கணக்கில் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இந்த டிரா சற்று ஏமாற்றமாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்