< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக் அரைஇறுதி: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இறுதிபோட்டிக்கு தகுதி..!!
பிற விளையாட்டு

புரோ கபடி லீக் அரைஇறுதி: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இறுதிபோட்டிக்கு தகுதி..!!

தினத்தந்தி
|
15 Dec 2022 11:08 PM IST

புரோ கபடி லீக் அரைஇறுதி போட்டியில் பெங்களூரு புல்சை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றது.

மும்பை,

9-வது புரோ கபடி லீக் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

ஜெய்ப்பூர் பிங்க் பாந்த்ர்ஸ் - பெங்களூரு புல்ஸ் ஆகிய 2 அணிகளுமே வலுவான அணிகள் என்பதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே பெங்களூரு புல்ஸ் அணி மீது ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பெங்களூரு அணி வெற்றியை வாய்ப்பை பறித்தது.

இதன்படி அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 49-29 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது. புரோ கபடி லீக் முதல் சீசனில் டைட்டில் வென்ற ஜெய்ப்பூர் அணி, 4வது சீசனில் இறுதிபோட்டியில் பாட்னா பைரேட்சிடம் தோற்று கோப்பையை இழந்தது. இந்த சீசனில் 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி முன்னேறி உள்ளது.

மேலும் செய்திகள்