< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: யு.பி யோத்தா அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி..!

image courtesy: ProKabaddi twitter

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: யு.பி யோத்தா அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி..!

தினத்தந்தி
|
4 Nov 2022 10:56 PM IST

இன்று நடைபெற்ற போட்டியில் யு.பி யோத்தா-புனேரி பால்டன் அணிகள் மோதின.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாட்னா பைரட்ஸ் அணி 34-31 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 45- 40 என்ற புள்ளி தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொடர்ந்து 9.30 மணிக்கு நடைபெற்ற 3-வது போட்டியில் யு.பி யோத்தா-புனேரி பால்டன் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் புனேரி பால்டன் அணி 40-31 என்ற புள்ளி கணக்கில் யு.பி யோத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்