< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி
|21 Oct 2022 9:55 PM IST
முன்னதாக இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஹரியானாவை வீழ்த்தி யு மும்பா வெற்றிபெற்றது.
பெங்களூரு,
புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஹரியானாவை வீழ்த்தி யு மும்பா வெற்றிபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 32-31 என்ற கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் யு மும்பா அணி வெற்றிபெற்றது.
இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் புனேரி பால்டன் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் புனே அணி 27-25 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.