< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: தபாங் டெல்லி அணியை வீழ்த்தி புனே அணி வெற்றி

Image Courtesy: Twitter @ProKabaddi

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தபாங் டெல்லி அணியை வீழ்த்தி புனே அணி வெற்றி

தினத்தந்தி
|
1 Nov 2022 8:48 PM IST

இதன் மூலம் இந்த தொடரில் புனே அணி 5-வது வெற்றியை பெற்றுள்ளது.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் புனேரி பால்டன் அணி 43-38 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. புனே அணி தரப்பில் சிறப்பாக ரெய்டு சென்ற ஆகாஷ் ஷிண்டே, மோஹித் கோயத் தங்களின் சிறப்பான ரெய்டு மூலம் தலா 13 புள்ளிகள் பெற்று கொடுத்தனர். இதன் மூலம் இந்த தொடரில் புனே அணி 5-வது வெற்றியை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்