< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: குஜராத் அணியை வீழ்த்தி பாட்னா வெற்றி

Image Tweeted By @ProKabaddi

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: குஜராத் அணியை வீழ்த்தி பாட்னா வெற்றி

தினத்தந்தி
|
31 Oct 2022 3:18 PM GMT

பாட்னா அணி தரப்பில் சிறப்பாக ரெய்டு சென்ற சச்சின் 13 புள்ளிகளை குவித்தார்.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாட்னா பைரட்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பாட்னா அணி 34-28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பாட்னா அணி தரப்பில் சிறப்பாக ரெய்டு சென்ற சச்சின் 2 போனஸ் புள்ளிகள் உட்பட 13 புள்ளிகளை குவித்தார். இதன் மூலம் இந்த தொடரில் பாட்னா அணி 3-வது வெற்றியை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்