< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்;  உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி

தினத்தந்தி
|
20 Dec 2023 3:49 PM GMT

ஜெய்ப்பூர் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது

புனே,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்ட நேர முடிவில் 41 - 24 என்ற புள்ளிகள் கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்