< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: யு மும்பா அணியை வீழ்த்தி 7-வது வெற்றியை பதிவு செய்தது ஜெய்ப்பூர் அணி

Image Tweeted By ProKabaddi

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: யு மும்பா அணியை வீழ்த்தி 7-வது வெற்றியை பதிவு செய்தது ஜெய்ப்பூர் அணி

தினத்தந்தி
|
7 Nov 2022 9:07 PM IST

ஜெய்ப்பூர் வீரர் அர்ஜுன் தேஷ்வால் இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

புனே ,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடர் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 42-39 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜெய்ப்பூர் வீரர் அர்ஜுன் தேஷ்வால் இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 5 போனஸ் புள்ளிகள் உட்பட 15 புள்ளிகளை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

மேலும் செய்திகள்