< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: புனே அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி
|29 Nov 2022 3:58 PM GMT
இன்று நடைபெற்ற போட்டியில் புனே - குஜராத் அணிகள் மோதின
ஐதராபாத்,
12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் புனே - குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி 51-39 என்ற கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.