< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி பெங்கால் அணி வெற்றி

Image Tweeted By @ProKabaddi

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி பெங்கால் அணி வெற்றி

தினத்தந்தி
|
12 Oct 2022 9:12 PM IST

பெங்கால் வாரியர்ஸ் 42-33 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பெங்களூரு,

புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 42-33 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீசனில் 2-வது வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக விளையாடிய மனீந்தர் சிங் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 11 புள்ளிகளை பெற்று கொடுத்து அசத்தினார். அவருக்கு அடுத்தபடியாக அந்த அணியில் ஸ்ரீகாந்த் ஜாதவ் சிறப்பான ரைடின் மூலம் 6 புள்ளிகளை அணிக்கு பெற்று தந்தார். கடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்த பெங்களூரு அணி இந்த சீசனில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

மேலும் செய்திகள்