< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்; பெங்களூருவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த அரியானா ஸ்டீலர்ஸ்..!

Image Courtesy: @ProKabaddi

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்; பெங்களூருவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த அரியானா ஸ்டீலர்ஸ்..!

தினத்தந்தி
|
9 Dec 2023 9:47 PM IST

இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

பெங்களூரு,

10-வது புரோ கபடி லீக் திருவிழா இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில் அரியானா அணி 38-32 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

மேலும் செய்திகள்