< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்; குஜராத் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் அரையிறுதிக்கு தகுதி

Image Courtesy: @ProKabaddi

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்; குஜராத் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் அரையிறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
27 Feb 2024 9:24 AM IST

10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் 2-ந் தேதி ஆமதாபாத்தில் தொடங்கியது.

ஐதராபாத்,

10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் 2-ந் தேதி ஆமதாபாத்தில் தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் கடந்த 21-ந் தேதியுடன் நிறைவு பெற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் புனேரி பால்டன் (96 புள்ளிகள்), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92), தபாங் டெல்லி (79), குஜராத் ஜெயன்ட்ஸ் (70), அரியானா ஸ்டீலர்ஸ் (70), பாட்னா பைரேட்ஸ் (69) ஆகிய அணிகள் முறையே முதல் 6 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் இந்த தொடரில் பிளே - ஆப் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. தெலுங்கானாவில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற 2வது எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்தன. இறுதியில் இந்த ஆட்டத்தில் 42-25 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்