< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்; பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அரியானா ஸ்டீலர்ஸ்

image courtesy; twitter/@ProKabaddi

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்; பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அரியானா ஸ்டீலர்ஸ்

தினத்தந்தி
|
16 Feb 2024 9:43 PM IST

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

சண்டிகர் ,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 39-32 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரியானா ஸ்டீலர்ஸ் இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

மேலும் செய்திகள்