< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பால்டன் ஆட்டம் டிரா

image courtesy: ProKabaddi twitter

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பால்டன் ஆட்டம் 'டிரா'

தினத்தந்தி
|
28 Oct 2022 9:58 PM IST

அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பால்டன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

பெங்களூரு,

9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 38-27 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 27 புள்ளிகள் பெற்றன. இதையடுத்து அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பால்டன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 27-27 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

தொடர்ந்து 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-யு.பி. யோத்தா அணிகள் மோதி வருகின்றன.

மேலும் செய்திகள்