< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியில் 2 தமிழக வீரர்கள் சேர்ப்பு

image courtesy: twitter/@tamilthalaivas

பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியில் 2 தமிழக வீரர்கள் சேர்ப்பு

தினத்தந்தி
|
12 Sept 2024 8:24 PM IST

தமிழ் தலைவாஸ் அணியில் 2 தமிழக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

இந்தியாவில் கபடி விளையாட்டை பிரபலப்படுத்தும் வகையில் புரோ கபடி லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 10 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இதனையடுத்து 11-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி தொடங்குகிறது.

இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் அணியில் 2 வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் நடந்த ஏலத்தில் விலை போகாத தமிழக வீரர்களான மாசானமுத்து லட்சுமணன், சந்திரன் ரஞ்சித் ஆகியோர் தலைவாஸ் அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்