< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
கலப்பு தொடர் ஓட்ட நடை பந்தயம்: பிரியங்கா - அக்ஷ்தீப் சிங் ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
|22 April 2024 2:02 AM IST
தகுதி சுற்றில் 18-வது இடம் பிடித்த பிரியங்கா - அக்ஷ்தீப்சிங் ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
அன்டாலியா,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கலப்பு தொடர் ஓட்ட நடைபந்தயம் புதிதாக அறிமுகம் ஆகிறது. இதற்கான தகுதி சுற்றான, உலக தடகள நடைபந்தய அணி சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியின் அன்டாலியாவில் நேற்று நடந்தது.
இதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட பிரியங்கா கோஸ்வாமி, அக்ஷ்தீப் சிங் ஜோடி 3 மணி 5 நிமிடம் 3 வினாடிகளில் 42.195 கிலோமீட்டர் தூரத்தை கடந்து 18-வது இடம் பிடித்தது. இந்த போட்டியில் முதல் 22 இடங்களை பிடிக்கும் ஜோடிகள் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும். அந்த வகையில் பிரியங்கா - அக்ஷ்தீப்சிங் ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.