< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
கராத்தே 1 சீரியஸ் ஏ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் பிரனாய் சர்மா!
|22 Nov 2022 8:37 AM IST
இறுதிப்போட்டியில் உக்ரைனின் டேவிட் யானோவ்ஸ்கியை சர்மா தோற்கடித்தார்.
ஜகார்த்தா,
ஜகார்த்தாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இந்திய வீரர் பிரனாய் சர்மா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
கராத்தே 1 சீரியஸ் ஏ பிரிவில், ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவு குமிடே இறுதிப்போட்டியில் உக்ரைனின் டேவிட் யானோவ்ஸ்கியை சர்மா தோற்கடித்தார். இதன்மூலம், கராத்தே 1 சீரியஸ் ஏ பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.