ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கபடி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து...!
|8வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கபடி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தென் கொரியாவின் பூசன் நகரில் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 தொடர் நடைபெற்று வந்தது. இதில், இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் ஈரான் மற்றும் இந்திய அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளி கணக்கில் ஈரானை விழ்த்தி தங்க பதக்கம் வென்றது.
முதல் பாதியில் இந்திய அணி 23-11 என்று முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியிலும் முன்னிலையை தக்கவைத்துக் கொண்டது. இந்திய அணியின் கேப்டன் அணியின் கேப்டன் பவன் ஷெராவத் அதிரடியாக விளையாடி புள்ளிகளை சேகரித்தார்.அவரே இந்த ஆட்டத்தின் நாயகனாக ஜொலித்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய கபடி சாம்பியன்ஷிப் கோப்பையை 8-வது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது. இந்நிலையில் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
8வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நமது அற்புதமான கபடி அணிக்கு வாழ்த்துக்கள்!
அவர்களின் அற்புதமான செயல்திறன் மற்றும் அருமாயான குழு முயற்சியின் மூலம், அவர்கள் உண்மையான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.