< Back
பிற விளையாட்டு
புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தியது அரியானா
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தியது அரியானா

தினத்தந்தி
|
20 Dec 2023 12:34 AM IST

புரோ கபடி லீக் போட்டியில் அரியானா அணி 31-29 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்சை தோற்கடித்தது.

புனே,

10-வது புரோ கபடி லீக் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்தித்தன. இந்த மோதலில் அரியானா 31-29 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்சை தோற்கடித்தது.

அதிகபட்சமாக அரியானா அணியில் வினய் 9 புள்ளிகள் ரைடில் எடுத்தார். 5-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணிக்கு இது 4-வது வெற்றியாகும். முதல் 3 ஆட்டங்களில் வென்று இருந்த குஜராத் அணி அதன் பிறகு தொடர்ந்து சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - உ.பி.யோத்தாஸ் (இரவு 8 மணி), புனேரி பால்டன் - பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன

மேலும் செய்திகள்