பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள்; ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் பிரனாய் வெற்றி
|ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் வெற்றி பெற்ற பிரனாய், 31-ந்தேதி நடைபெறும் இறுதி போட்டியில் வியட்நாமின் லே டுக் பாட்டை எதிர்த்து விளையாடுவார்.
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், குரூப்-கே பிரிவில், ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரரான எச்.எஸ். பிரனாய் மற்றும் ஜெர்மனியின் பேபியான் ரோத் விளையாடினர்.
இந்த போட்டியில், 21-18, 21-12 என்ற செட் கணக்கில் பேபியானை வீழ்த்தி பிரனாய் வெற்றி பெற்றார். இந்த போட்டி 45 நிமிடங்கள் வரை நீடித்தது.
இதனை தொடர்ந்து 31-ந்தேதி நடைபெறும் குரூப்-கே பிரிவுக்கான இறுதி போட்டியில் வியட்நாமின் லே டுக் பாட்டை எதிர்த்து பிரனாய் விளையாடுவார்.
இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், 10 மீட்டர் மகளிர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கான முதல் பதக்க வேட்டையை தொடங்கி வைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பாக்கர் பெற்றிருக்கிறார்.