< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி; மணிகா பத்ரா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
|30 July 2024 4:24 AM IST
பாரீஸ் ஒலிம்பிக்கில், டேபிள் டென்னிஸ் போட்டியில் 4-0 என்ற புள்ளி கணக்கில் (11-9, 11-6, 11-9, 11-7) பிரிதிகாவை வீழ்த்தி மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் சுற்று-32 போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா (வயது 29) மற்றும் பிரான்சின் பிரிதிகா பவாடே விளையாடினர்.
இந்த போட்டியில், 4-0 என்ற புள்ளி கணக்கில் (11-9, 11-6, 11-9, 11-7) பிரிதிகாவை வீழ்த்தி மணிகா பத்ரா வெற்றி பெற்றார். இதற்கு முன் நடந்த சுற்று-64 போட்டியில், பிரிட்டனை சேர்ந்த அன்னா ஹர்சியை 11-8, 12-10, 11-9, 9-11, 11-5 என்ற செட் கணக்கில் மணிகா பத்ரா வீழ்த்தினார்.