< Back
பிற விளையாட்டு
பாராஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த தமிழ்நாடு வீராங்கனை

image courtesy: twitter/@Media_SAI

பிற விளையாட்டு

பாராஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த தமிழ்நாடு வீராங்கனை

தினத்தந்தி
|
2 Sept 2024 9:26 AM IST

பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் துளசிமதி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான இன்று பாரா பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக வீராங்கனைகளான மனிஷா ராமதாஸ் மற்றும் துளசிமதி முருகேசன் இருவரும் நேருக்கு நேர் மல்லுக்கட்டினர்.

இதில் துளசிமதி முருகேசன் 23-21 மற்றும் 17-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். தோல்வியடைந்த மனிஷா வெண்கல பதக்க போட்டியில் விளையாட உள்ளார்.

துளசிமதி இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையான யாங் க்யூசியா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்