< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
பாரா ஒலிம்பிக் : இந்திய வீரர் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்
|30 Aug 2024 6:39 PM IST
துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
பாரீஸ்,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
8 வீரர்கள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் மொத்தம் 234.9 புள்ளிகள் எடுத்து 2வது இடம் பிடித்தார். தென் கொரியா வீரர் ஜியோங்டு ஜோ 237.4 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கமும், சீன வீரர் யாங் 214.3 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கமும் வென்றனர் .
இந்தியா இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.