< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
பாரா உலக வில்வித்தை தரவரிசை: நம்பர் ஒன் இடத்தை பிடித்த இந்திய வீராங்கனை!
|29 Nov 2023 3:24 PM IST
பாரா உலக வில்வித்தை தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
புதுடெல்லி,
மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா உலக வில்வித்தை தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் பெண்களுக்கான காம்பவுண்ட் ஓபன் பிரிவில் 16 வயதான இந்திய வீராங்கனை ஷீதல் தேவி 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பாரா ஆசிய விளையாட்டில் 2 தங்கப்பதக்கங்கள் வென்றதன் மூலம் அவர் 2 இடங்கள் முன்னேறி 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.