< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
பாரா ஒலிம்பிக்; இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் - விவரம்
|8 Sept 2024 9:33 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
பாரீஸ்,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த போட்டி தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம் பின்வருமாறு:-
பாரா கேனோ:-
பெண்கள் கயாக் ஒற்றையர் 200 மீ - கே.எல்.1 அரையிறுதி - பூஜா ஓஜா - மதியம் 1.30 மணி
பாரா கேனோ:-
பெண்கள் கயாக் ஒற்றையர் 200 மீ - கே.எல்.1 (இறுதிப்போட்டி - பதக்கச்சுற்று) (தகுதிபெற்றால்) - பூஜா ஓஜா - மதியம் 2.55 மணி