பிற விளையாட்டு
பிற விளையாட்டு
பாரா ஒலிம்பிக்; இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - வெள்ளி வென்றார் யோகேஷ் கத்துனியா
|2 Sept 2024 3:14 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
பாரீஸ்,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்களுக்கான வட்டு எறிதல் எப்-56 இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் யோகேஷ் கத்துனியா கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட யோகேஷ் கத்துனியா 42.22 மீ தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் பிரேசிலின் கிளாடினி பாடிஸ்டா டோஸ் சாண்டோஸ் 46.86 மீ தூரம் எறிந்து தங்கப்பதக்கமும், கிரீஸின் கான்ஸ்டான்டினோஸ் சூனிஸ் 41.32 மீ தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
இந்த பதக்கத்தின் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.