< Back
பிற விளையாட்டு
உலக பில்லியர்ட்ஸ்: இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
பிற விளையாட்டு

உலக பில்லியர்ட்ஸ்: இந்திய வீரர் பங்கஜ் அத்வானி 'சாம்பியன்'

தினத்தந்தி
|
9 Oct 2022 1:07 AM IST

உலக பில்லியர்ட்ஸ் போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.

கோலாலம்பூர்,

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி 4-0 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் சவுரவ் கோத்தாரியை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மராட்டியத்தை சேர்ந்த 37 வயதான பங்கஜ் அத்வானி பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கரில் பல்வேறு வகையான உலக போட்டிகளில் கைப்பற்றிய 25-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

மேலும் செய்திகள்