< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வி
|6 April 2023 2:36 AM IST
முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னாவை துருக்கி வீராங்கனை வீழ்த்தினார்.
ஆர்லீன்ஸ்,
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 16-21, 14-21 என்ற நேர்செட்டில் துருக்கியின் நீஸ்லிகன் யிஜித்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தானியா ஹேமந்த் 21-17, 21-18 என்ற நேர்செட்டில் பிரான்சின் லியோன்சி ஹூட்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.