< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் மிதுன், பிரியான்ஷீ 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|6 April 2023 2:08 AM IST
இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 24-22, 25-23 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் விக்டர் வின்ட்செனை வீழ்த்தினார்.
ஆர்லீன்ஸ்,
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-19, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் அயர்லாந்தின் நாத் நுயேனிடம் வீழ்ந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 24-22, 25-23 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் விக்டர் வின்ட்செனை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத் 21-18, 21-13 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் கிரண் ஜார்ஜை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.