< Back
பிற விளையாட்டு
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரியான்ஷூ காலிறுதிக்கு தகுதி
பிற விளையாட்டு

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரியான்ஷூ காலிறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
6 April 2023 3:17 PM GMT

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷூ காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆர்லீன்ஸ்,

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21-8, 21-16 என்ற நேர் செட் கணக்கில் நிஷிமோடோவை வீழ்த்தி வெற்றி பெற்ற பிரியான்ஷூ காலிறுதிக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்