< Back
பிற விளையாட்டு
ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா தோல்வி
பிற விளையாட்டு

ஒலிம்பிக்; கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா தோல்வி

தினத்தந்தி
|
17 Aug 2023 6:03 PM IST

ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 75-92 என்ற புள்ளி கணக்கில் சவுதி அரேபிய அணியிடம் வீழ்ந்தது.

டமாஸ்கஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் நடைபெற உள்ள கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெற ஆசிய அணிகளுக்கான முதற்கட்ட தகுதி சுற்று ஆட்டங்கள் சிரியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, பக்ரைன், கஜகஸ்தான், சவுதி அரேபியா, இந்தோனேஷியா மற்றும் சிரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். அதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இதில் பங்கேற்றுள்ள இந்திய அணி தனது முதல் 2 போட்டிகளில் வெற்றியும், 3-வது போட்டியில் தோல்வியும் அடைந்திருந்தது. இந்நிலையில் தனது 4-வது போட்டியில் சவுதி அரேபிய அணியுடன் மோதியது. இதில் சவுதி அரேபிய அணியிடம் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி 75-92 என்ற புள்ளி கணக்கில் சவுதி அரேபிய அணியிடம் வீழ்ந்தது. தகுதி சுற்று போட்டியில் 2 வெற்றி, 2 தோல்விகளை சந்தித்துள்ள இந்திய கூடைப்பந்து அணியின் ஒலிம்பிக் கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது. இந்திய அணி தனது கடைசி போட்டியில் பக்ரைன் அணியுடன் விளையாட உள்ளது.

மேலும் செய்திகள்