< Back
ஹாக்கி
இந்திய ஆக்கி அணிக்கு 2033-ம் ஆண்டுவரை ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா அரசு முடிவு

கோப்புப்படம் 

ஹாக்கி

இந்திய ஆக்கி அணிக்கு 2033-ம் ஆண்டுவரை ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா அரசு முடிவு

தினத்தந்தி
|
25 April 2023 1:07 AM IST

ஆக்கி விளையாட்டின் மையமாக திகழும் ஒடிசா இப்போது தங்களது ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

புவனேஸ்வர்,

இந்திய ஆக்கி அணிக்கு 2018-ம் ஆண்டில் இருந்து ஒடிசா மாநில அரசு ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது. அண்மையில் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை ஆக்கி, புரோ ஆக்கி லீக் போன்ற பெரிய போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

ஆக்கி விளையாட்டின் மையமாக திகழும் ஒடிசா இப்போது தங்களது ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. அதாவது 2023-ல் இருந்து 2033-ம் ஆண்டு வரை இந்திய ஆண்கள்- பெண்கள் ஆக்கி அணிகளுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) வழங்கும் ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிப்பது என்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்